இந்தியாவில் பேட்ஸ்மேனுக்கு பயத்தை தரக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை - அகமது சேஷாத்!

Updated: Fri, Jun 23 2023 15:28 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் பற்றி ஏதேனும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினால் ஊடகங்கள் வெளிச்சம் படும். இதனால், இப்படி வாய்க்கு வந்த கருத்தை சொல்வதில் மற்ற நாட்டு வீரர்கள் குறியாக இருக்கிறார்கள். அதுவும் பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத் எல்லாம், கடைசியாக 2017ஆம் ஆண்டு தான் ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். டி20 போட்டியை பொறுத்தவரை பாகிஸ்தானுக்காக 2019ஆம் ஆண்டு விளையாடினார். இதனால் தம்மை யாரும் மறந்து விட கூடாது என்பதற்காக அகமது சேஷாத், இப்படி ஒரு பேட்டியை கூறியுள்ளார். 

இதில், “நான் இந்திய வீரர்களை அவமரியாதையாக சொல்லவில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு பயத்தை காட்டக்கூடிய எந்த ஒரு பந்துவீச்சாளரும் கிடையாது. இந்த பவுலரை பார்த்தால் எதிரணி பேட்ஸ்மேன்கள் பயப்பட வேண்டும். அப்படி ஒருவர் இந்திய அணியில் கிடையாது. பும்ரா, ஜடேஜா, அஸ்வின் போன்று நல்ல பவுலர்கள் இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் அபாயகரமான பவுலர்கள் என்று சொல்ல முடியாது.

அதே சமயம் இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள். எப்போதுமே அபாயகரமாக தான் இருப்பார்கள். விராட் கோலி மீது நான் நல்ல மதிப்பை வைத்திருக்கிறேன். எனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் நான் விராட் கோலி இடம் கேட்பேன். அவரும் எனக்கு பதில் அளிப்பார். என்னைக் கேட்டால் சோயிப் அக்தருக்கு தவிர எதிரணிக்கு பயத்தை கொடுக்கக் கூடிய வேறு எந்த பந்துவீச்சாளரையும் நான் பார்த்ததில்லை. நான் பாகிஸ்தான் அணிக்கு வந்தபோதே அவர் பெரிய ஜாம்பவானாக தான் இருந்தார். சோயிப் அக்தர் ஓவரில் நான் ஒரு எட்டு பந்துகளை வலை பயிற்சியில் பிடித்திருப்பேன்.

அதில் அனைத்துமே ரிவர்ஸ் ஸ்விங் பந்து தான். சோயிப் அக்தரிடம் இரண்டு சிறந்த தகுதிகள் இருக்கின்றன.  ஒன்று அவர் பயிற்சியில் கூட நோபால் வீசமாட்டார். இரண்டாவது பேட்ஸ்மன்களுக்கு வலை பயிற்சி இப்போது அவர் பவுன்சர் வீச மாட்டார்.  ஏனென்றால் பவுன்ஸ்ரால் வீரர்களுக்கு காயம் ஏற்படும் என்று அவருக்கு நன்றாக தெரியும். அதே சமயம் நாம் பந்துவீச்சாளர்களை பார்த்து பயப்படக்கூடாது யார் பந்துவீச்சாளர் என்று நாம் பார்ப்பதை விட நம்முடைய முழு கவனமும் பந்தின் மீது தான் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை