இது ரோஹித் சர்மாவுக்கு கற்கு நேரம் - ரவி சாஸ்திரி!

Updated: Fri, Mar 10 2023 17:49 IST
Ahmedabad Test pitch a big learning curve for Rohit Sharma, says ex-India head coach Ravi Shastri (Image Source: Google)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி வழக்கத்துக்கு மாறாக 5 நாள் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் மூன்று நாட்களில் முடிவடைந்து விடும் நிலையில் பல நாட்கள் கழித்து அகமதாபாத் போட்டி சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலை கொடுத்து வருகிறது. நடப்பு தொடரில் ஒரே ஒரு முறை தான் 400 ரன்கள் அடிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக 400 ரன்கள் கடந்து விளையாடி வருகிறது.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் இந்த போட்டியில் இருந்தது. குறிப்பாக புதிய பந்தை ரோஹித் சர்மா விரைவாக எடுத்தது, ஆஸ்திரேலிய அணி ரன் குவிக்க சாதகமாக அமைந்து விட்டதாக குற்றச்சாட்டு இருந்தது. மேலும் புதிய பந்தை எடுத்து இரண்டு ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ரோஹித் சர்மா வழங்கினார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகபந்து பேச்சாளர் மிச்சர் ஜான்சன், ரோஹித் சர்மா தங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்களை நம்பி கூடுதல் ஓவர்கள் வழங்கி இருக்க வேண்டும் என கூறினார். புது பந்து வந்த பிறகு தான் ஆஸ்திரேலியா வீரர்கள் ரன் குவிக்க தொடங்கியதாகவும் அவர் கூறினார். 

இதற்கு பதில் அளித்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “இது ரோகித் சர்மாவுக்கு கற்கும் நேரம். அவர் தலைமை தாங்கிய அனைத்து டெஸ்ட் போட்டிகளும் விரைவாக முடிவடைந்து விடும். ஆடுகளம் நெருக்கடியாக இருக்கும் போது போட்டி மிக வேகமாக மாறும். ஆனால் இது ஒரு நல்ல ஆடுகாலம் என்பதால் உங்களுக்கு விக்கெட்டுகள் சீக்கிரம் கிடைக்காது.

ஒவ்வொரு விக்கெட்டுக்கும் நீங்கள் போராட வேண்டியது இருக்கும். அப்போதுதான் ஒரு கேப்டனாக நீங்கள் அதிகமாக மூளையை பயன்படுத்த வேண்டும். எப்படி பந்துவீச்சாளர்களை மாற்றுவது என்பது குறித்து யோசிக்க வேண்டும். வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கும் இந்தியாவில் நல்ல ஆடுகளத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கும் ரோஹித் சர்மா தயாராக வேண்டும்.

கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பல திறமைகள் இருக்கிறது. ஆனால் இது போன்ற போட்டி தான் அவருடைய திறமைகளை வெளிக்கொண்டுவரும். எதிரணி வீரர்கள் ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தால் கேப்டனாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை