தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்டர்களால் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்கு முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Advertisement

அதன்பின், 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் வீரர்களும் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 47 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 19 ரன்களையும் சேர்க்க, தென் ஆப்பிரிக்க 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது தொடரை சமன்செய்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசியுள்ள தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம், “இந்த போட்டியில் எங்கள் அணி வீரர்கள் நன்றாகப் பந்துவீசினார்கள். நாங்கள் சில நல்ல திட்டங்களுடன், அதற்கேற்ற வகையில் எங்கள் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று நினைக்கிறேன். பேட்டிங்கைப் பற்றி கூற வேண்டும் எனில் நாங்கள் எதிர்பார்த்து இன்று நடக்கவில்லை. ஏனெனில் நீங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தால் அது சிறப்பானதாக இருக்காது. 

ஆனாலும் நாங்கள் நிச்சயமாக எங்கள் கிரிக்கெட் பிராண்டைத் தொடரப் போகிறோம். இப்போட்டியில் ஸ்டப்ஸ் மற்றும் கோட்ஸி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் இவ்வாறு செயல்படுவதை பார்பதற்கு நன்றாக இருக்கிறது. அவர்களுடன் சிமிலேன் மற்றும் பீட்டர் ஆகியோர் பந்துவீச்சில் பெரும் பங்கை வகித்தனர். இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது சக வீரர்களை உத்வேகப்படுத்துகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News