ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. 

Advertisement

இத்தோல்வியின் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை எதிரொலித்து உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, தோனியை போல் அவர் அமைதியாக இருந்தாலும் தலைமைத்துவப் பண்பு அவரிடம் இல்லை என விமர்சித்துள்ளார். 

Advertisement

இது குறித்து பேசிய அஜய் ஜடேஜா,"ராகுல் எப்போதும் அட்ஜஸ்ட் செய்கிறார், மென்மையாகப் பேசுகிறார் இது கேப்டனாக இருக்கச் சரிப்பட்டு வராது. ராகுலிடம் தலைமைத்துவ பண்பு இல்லை. அவர் மென்மையான குணம் படைத்தவர், இதனால் நீண்ட காலம் அவர் கேப்டனாக இருக்க முடியும். ஆனால் அது கேப்டன்சிக்குப் போதாது. 

தோனி போன்று அமைதியாக இருக்கிறார் ராகுல், அது பாசிட்டிவ் அம்சம்தான் பஞ்சாப் கேப்டனாக ராகுல் பொறுப்பைத் தோள்களில் சுமப்பதில்லை. இதனால் தான் தோனி போல அவர் அமைதியாக இருந்தாலும், தோனியை போல ஒரு வெற்றிகரமான கேப்டனாக அவரால் இருக்க முடியவில்லை.

அவர் அணியை நடத்தும் பொறுப்பைச் சுமக்காததால் ராகுல் முடிவுகளை யாரும் விமர்சிப்பதில்லை. ராகுல் உண்மையில் தலைமைத்துவ பண்புகளுடன் செயல்பட்டால் அவரது செயல்கள் மீது விமர்சனம் எழும். இப்போதைக்கு அவர் தலைமைப் பண்புக்கு ஏற்றவராக இல்லாததால் யாரும் அவரை விமர்சிப்பதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News