ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவட்கு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் உடல்நிலை பிரச்சனை காரணமாக மொயின் அலி விலகினார். இதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அனுபவ வீரர் ரஹானே களமிறங்கினார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

Advertisement

ஆனால் சேஸிங்கின் போது சென்னை அணி ரன் ஏதும் எடுக்காமல் கான்வே விக்கெட்டை இழந்து சிக்கலில் சிக்கிய போது ரஹானே களமிறங்கினார். அப்போது தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரஹானே 19 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, சென்னை அணியை டிரைவர் சீட்டில் அமர வைத்தார். இறுதியாக 27 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இது சென்னை அணி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களுக்கும் ஆச்சரியம் கொடுத்தது.

Advertisement

இதனால் ரஹானேவை இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. ஐபிஎல் தொடருக்கு பின் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் ரஹானே சேர்க்க வேண்டும் என்று பலரும் பேசி வருகின்றனர். ஏனென்றால் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. அதேபோல் பும்ராவும் பங்கேற்பது சந்தேகம் தான்.

அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இதனால் ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் ரஹானேவுக்கு இருப்பதால், அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். 

இதுகுறித்து ரஹானேவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “என்ன நடந்தாலும், நான் எனது முயற்சியை கைவிடப் போவதில்லை. ஒருவேளை மீண்டும் இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அதற்கு தயாராக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News