சாம்பியன்ஸ் கோப்பை 2025: அணிகள், போட்டி அட்டவணை, நேரம் & நேரலை விவரங்கள்!

Updated: Tue, Feb 04 2025 12:50 IST
Image Source: Google

ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 

இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்க அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளின் மொத்த விரங்கள், போட்டி அட்டவணை, போட்டிக்கான நேரம் மற்றும் நேரலை ஒளிபரப்பு வீரங்கள் உள்ளிட்டவற்றை இப்பதிவில் காண்போம். 

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள்

  • இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.
  • பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், ஃபகார் ஜமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தையாப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி.
  • ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.
  • தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராஸ்ஸி வான்டெர் டுசென்.
  • ஆஃப்கானிஸ்தான் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கே), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், இப்ராஹிம் ஸத்ரான், செதிகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷித் கான், அல்லா கசான்ஃபர், நூர் அஹ்மத், ஃபசல் ஹக் ஃபரூக்கி, நவீத் ஸத்ரான் மற்றும் ஃபரித் அஹ்மத் மாலிக்.
  • வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கேப்டன்), சௌமியா சர்க்கார், தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மஹ்மூதுள்ளா, ஜக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான், பர்வேஸ் ஹொசைன் எமன், நசும் அஹ்மத், தன்சிம் ஹசன் ஷாகிப், நஹித் ராணா.
  • நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), வில் யங், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், பென் சியர்ஸ், வில் ஓ'ரூர்க்
  • இங்கிலாந்து அணி: ஹாரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஸ் பட்லர், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத், மார்க் வுட்.

சாம்பியன்ஸ் கோப்பை நேரலை

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் கணலாம்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நேரம்

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

சாம்பியன்ஸ் கோப்பை போட்டி அட்டவணை

  • பிப்ரவரி 19: பாகிஸ்தான் vs நியூசிலாந்து - கராச்சி
  • பிப்ரவரி 20: வங்கதேசம் vs இந்தியா - துபாய்
  • பிப்ரவரி 21: ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா - கராச்சி
  • பிப்ரவரி 22: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து - லாகூர்
  • பிப்ரவரி 23: பாகிஸ்தான் vs இந்தியா, துபாய்
  • பிப்ரவரி 24: வங்கதேசம்  vs நியூசிலாந்து - ராவல்பிண்டி
  • பிப்ரவரி 25: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - ராவல்பிண்டி
  • பிப்ரவரி 26: ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து - லாகூர்
  • பிப்ரவரி 27: பாகிஸ்தான் vs வங்கதேசம் - ராவல்பிண்டி
  • பிப்ரவரி 28: ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா - லாகூர்
  • மார்ச் 1: தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து - கராச்சி
  • மார்ச் 2: நியூசிலாந்து vs இந்தியா - துபாய்
  • மார்ச் 4: அரையிறுதி 1 - துபாய்
  • மார்ச் 5, அரையிறுதி 2 - லாகூர்
  • மார்ச் 9 - இறுதிப் போட்டி - லாகூர் (இந்தியா தகுதி பெறாவிட்டால், அது துபாயில் விளையாடப்படும்) 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை