நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணிவெற்றி பெற்றும் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பல்லகலேவில் நடைபெற்றட்து .

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் மழை காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேன், மிட்செல் ஹெய் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்மாக மார்க் சாப்மேன் 76 ரன்களும், மிட்ச் ஹே 49 ரன்களும் எடுத்தனர். இலங்கை சார்பில் ஜெஃப்ரி வாண்டர்சே மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அசிதா 2பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியும் தொடக்கத்திலேயே டாப் ஆர்டர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் அந்த அணியில் குசால் மெண்டிஸ் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 74 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய மஹீஷ் தீக்ஷனா 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி 46 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொட்ரையும் கைப்பற்றி அசத்தியது. 

இந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், “குறைந்த ஸ்கோரை பாதுகாப்பது எப்போதும் சவாலாக இருக்கும். குசால் மெண்டிஸ் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாக விளையாடினார். நாங்கள் ரன் ரேட்டை உயர்த்த விரும்பினோம், ஆனால் அவர்கள் அதை 5க்கு மேல் போக விடவே இல்லை, அதனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இன்று மைதானத்தில் பந்து இவ்வளவு சுழன்றது சற்று ஆச்சரியமாக இருந்தது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

உண்மையில் நாங்கள் இங்கு ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம் என்பதே நிதர்சனம். ஏனெனில் 240 அல்லது அதற்கு மேல் அடித்திருந்தால் அது மிகவும் எதிரணிக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். இங்கு பேட்டிங் செய்வது எப்போதுமே சவாலாக உள்ளது, மேலும் இலங்கை அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களுடன் சிறப்பாக பந்து வீசியது. இன்னும் ஓரிரு நாட்களில் எங்களுக்கு மற்றொரு ஆட்டம் உள்ளது, அதில் நாங்கள் கூடுதல் ரன்களை அடிக்க முயற்சி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News