சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்; உத்தபாவிற்கு வாய்ப்பளிக்க படுமா?

Updated: Wed, Apr 28 2021 13:52 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்தளித்து வருகிறது. இதில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது. 

ஆர்சிபி அணிக்கெதிரான கடந்த போட்டியில் சிஎஸ்கே வின் மொயீன் அலி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டுவைன் பிராவோ களமிறங்கினார். 

இந்த நிலையில் சிஎஸ்கேவின் இன்னொரு நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு காயமடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் அவரால் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியின் போது ராயுடு காயமடைந்தார்.

இதனால் ஓடும் போது அம்பதி ராயுடு நொண்டியபடி ஓடினார். போட்டிக்கு பின்பும் கஷ்டப்பட்டுதான் நடந்தார். இந்த நிலையில் அவரால் இன்றைய போட்டியில் களமிறங்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதனால் இன்று நடக்கும் போட்டியில் அம்பதி ராயுடுவுக்கு மற்றொரு அதிரடி வீரர் ராபின் உத்தப்பா களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக இந்தியாவின் உள்ளூர் தொடர்களான சயீத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிகளில் கேரளா அணிக்காக விளையாடி ராபின் உத்தப்பா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை