அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்யும் என்பதுடன், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

ஏனெனில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க தவறிவருகின்றனர். அந்தவகையில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே உள்ளிட்ட வீரர்கள் இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது அணிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம் கண்கூடாகவே தெரிந்தது. 

இதன் காரணமாக நாளைய போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஷிவம் தூபேவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஷிவம் துபேவை விட சஞ்சு சாம்சன் விளையாடியிருக்க வேண்டும் என்று நான் உண்மையாகவே நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

ஏனெனில் ஷிவம் தூபே தற்போது இந்திய அணியில் ஒரு பேட்டராக மட்டுமே விளையாடி வருகிறார். இதனால் அவரை விட சிறந்த பேட்டிங் டெக்னிக்கைக் கொண்ட சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல்கள் பாகிஸ்தான் போட்டியின் போதே எழுந்திருந்தது. இந்நிலையில் தான் அம்பத்தி ராயுடுவும் சாம்சனிற்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News