பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே பேட்டிங்கினை தேர்வு செய்தார். முத்லில் 15.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வந்தது. 

Advertisement

பின்னர் நிலைத்து விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செய டி சில்வா ஜோடி 131 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்தார்கள்.  இதில் மேத்யூஸ் 61 ரன்களுக்கும் தனஞ்செய டி சில்வா ஜோடி 122 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 312 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் ஆனது. ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரர் அஹமது தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அப்துல்லா ஷஃபிக் 19 ரன்களுக்கும், கேப்டன் பாபர் ஆசாம் 13 ரன்களுக்கும், ஷான் மசூத் 39 ரன்களுக்கும், சர்ஃப்ராஸ் அஹ்மத் 17 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் சகீல் - அஹா சல்மான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்து வருகின்றனர். 

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சௌத் சகீல் 69 ரன்களுடனும், அகா சல்மான் 61 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News