ஓய்வு முன் கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன்; வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலக கிரிக்கெட் அணிகள் தங்களது அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இம்மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் சமீபத்தில் அறிவித்துள்ளது.
இத்தொடரின் முதல் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனிற்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மட்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுண்டி சாம்பியன்ஷில் தொடரில் லங்காஷயர் அணிக்காக ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடி வருகிறாது.
அந்தவகையில் நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்கு எதிராக களமிறங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்ஸின் 16 ஓவர்கள் பந்துவீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன்மூலம் நாட்டிங்ஹாம்ஷையர் அணியானது 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், ஃபாலோ ஆன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து வருகிறது. மேற்கொண்டு அந்த அணி லங்காஷயர் அணியை விட 143 ரன்கள் பின் தங்கிய நிலையில் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்க 7 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், தனது கடைசி போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கவுண்டி சாம்பியன்ஷிம் தொடரில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.