இங்கிலாந்து லையன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஃபிளின்டாஃப் நியமனம்!

Updated: Sat, Sep 07 2024 21:35 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிலிண்டாஃப். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பிளின்டாஃப் இங்கிலாந்து அணிக்காக கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகமாக 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 26 அரைசதங்களுடன் 3845 ரன்களையும், 226 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட்டில் 141 போட்டிகளில் விளையாடி 3 சதம், 18 அரைசதங்கள் என 3394 ரன்களையும், 169 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேற்கொண்டு 7 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஃபிளிண்டாஃப் 76 ரன்களையும் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். ஆனால் டிசம்பர் 2022 இல் டாப் கியர் ஷோவின் படப்பிடிப்பின் போது பயங்கரமான கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த பிறகு, ஆண்கள் அணியின் நிர்வாக இயக்குனர் ராப் கீயின் ஆதரவுடன் பிளின்டாஃப் கிரிக்கெட் அணிக்கு திரும்பினார்.

அப்போதிருந்து, அவர் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக பணியாற்றி வந்தார். அதனைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலனது அணியின் துணை பயிற்சியாளராகவும் ஃபிளின்டாஃப் செயல்பட்டு வந்தார். மேலும் லயன்ஸ் மற்றும் அண்ட்ர்19 அணிகளுடனும் பணிபுரிந்துள்ளார், மேலும் நடப்பாண்டு தி ஹன்ட்ரட் கிரிக்கெட்டில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் நியமனம் செய்யப்பட்டதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) இன்று அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டிற்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் அணியானது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வரும் நிலையில், ஃபிளின்டாஃபின் பதவிக்காலம் அக்டோபரில் தொடங்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

இதுகுறித்து பேசியுள்ள ஃபிளின்டாஃப், "இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் நாட்டில் வளர்ந்து வரும் சில திறமைசாலிகளுடன் இணைந்து செயல்படுவது மற்றும் லயன்ஸ் திட்டத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. சர்வதேச வெற்றிக்காக பாடுபடும் வீரர்களுக்கு இது ஒரு முக்கியமான படியாகும். மேலும் அந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை