இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதிய ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன் அமெரிக்க அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். இன்றைய போட்டிக்கான அமெரிக்க அணியில் காயம் காரணமாக அந்த அணி கேப்டன் மொனாங்க் படேல் விளையாடவில்லை.

Advertisement

அவருக்கு பதிலாக ஷயான் ஜஹாங்கீர் அணியில் சேர்க்கப்பட்டு, ஆரோன் ஜோன்ஸ் கேப்டனாக செயல்பட்டார். இதையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே தொடக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஆண்ட்ரிஸ் கௌஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முதல் ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் அமெரிக்க அணி 3 ரன்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், இணைந்த ஸ்டீவன் டெய்லர் - கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். 

அதன்பின் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆரோன் ஜோன்ஸும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் டெய்லருடன் இணைந்துள்ள நிதீஷ் குமார் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலம் அமெரிக்க அணியானது 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 42 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

மேலும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையையும் அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். மேலும் உலகளவில் இந்த சாதனையை படைத்த 5ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இப்பட்டியளில் நமீபியா அணியின் ரூபன் டிரம்பெல்மேன் இரண்டு முறை முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்

  • மஷ்ரஃப் மோர்டசா (வங்காளதேசம்) - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2014
  • ஷபூர் ஸத்ரான் (ஆஃப்கானிஸ்தான்) - ஹாங்காங் அணிக்கு எதிராக, 2014
  • ரூபன் ட்ரம்பெல்மேன் (நமீபியா) - ஸ்காட்லாந்திற்கு எதிராக, 2021
  • ரூபன் டிரம்பெல்மேன் (நமீபியா) - ஓமன் அணிக்கு எதிராக, 2024
  • அர்ஷ்தீப் சிங் (இந்தியா) - அமெரிக்காவிற்கு எதிராக, 2024

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News