Ashes 2023: ப்ரூக்கின் சவாலுக்கு பந்துவீச்சில் பதிலடி கொடுத்த லையன்; வைரல் காணொளி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்த கையோடு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி பிர்மிங்ஹாமில் இன்று தொடக்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி ஜாக் லீச் மற்றும் பென் டக்கட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி இன்னிங்ஸின் தொடக்கம் முதலே அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடினர். ஆனால் துரதிஷ்டவசமாக டக்கட் 12 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஒல்லி போப், ஜாக் கிராலியுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபாட்டார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஒல்லி போப் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ஜாக் கிரௌலி 53 பந்துகளுக்கு அரைசதம் அடித்து அசத்தினார். உணவு இடைவேளைக்கு மீதம் இரண்டு பந்துகள் இருக்க ஸ்காட் போலண்ட் வீசிய பந்தில் அடிக்க முயற்சித்து கீப்பரிடம் பிடிபட்டு ஜாக் கிராலி வெளியேறினார். இவர் 73 பந்துகளுக்கு 61 ரன்கள் அடித்திருந்தார்.
அதிரடிக்கு பெயர் போன ஹாரி புரூக் உணவு இடைவேளை முடிந்த வந்த உடனேயே அதிரடியாக பேட்டிங்கை ஆரம்பித்தார். நாதன் லையன் வீசிய பந்தை அடிக்க முயற்சித்தபோது, பந்து மேலே சென்றது. கீப்பரும் பந்தை பிடிக்க தவறிவிட்டார். ஆனால் நேராக ஸ்டம்பில் அடித்து ஹாரி புரூப் போல்ட் ஆனார். இந்த விக்கெட் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இப்போட்டி தொடங்கும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த ஹாரி ப்ரூக், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையனுக்கு சவால் விடும் வகையில் பேசியிருந்தார். தற்போது நாதன் லையன் பந்துவீச்சிலேயே ஹாரி ப்ரூக் விக்கெட்டை இழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.