சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் முயற்சியைப் பாராட்டிய ஜோ ரூட்!

Updated: Sun, Jan 09 2022 22:26 IST
Ashes 4th Test: Joe Root Praises Team England's Character After Hard-Fought Draw (Image Source: Google)

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரை வென்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கடைசி வரை போராடி ஆட்டத்தை டிரா செய்தது. 

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த இங்கிலாந்து அணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பெரு முயற்சியை அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் பெரு மகிழ்ச்சியும், பெருமையையும் அடைகிறேன். கடந்த சில மாதங்களாக நாங்கள் இந்த விளையாட்டில் சரிவர செயல்படவில்லை. ஆனால் இன்றைய போட்டியின் மூலம் நாங்கள் மீண்டும் எங்களது ஃபார்முக்கு திரும்பியுள்ளோம்.

மேலும் இப்போட்டியில் கிடைத்துள்ள உத்வேகத்துடன் ஹாபர்ட்டில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை