வெளியான ஆஷஸ் டெஸ்ட் அட்டவணை; மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ள ஆஸி!

Updated: Wed, May 19 2021 18:25 IST
Ashes schedule confirmed, England and Australia to play final Test in Perth (Image Source: Google)


இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் எனப்படும் டெஸ்ட் தொடர் நடத்தப்படுவது வழக்கம். அதன்படின் 2021/22ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஆட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆகியவை இன்று வெளியிட்டுள்ளது. 

அதன்படி தொடரின் முதல் போட்டியானது இந்தாண்டு டிசம்ப 8ஆம் தேதி கபா மைதானத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. 

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அதேபோல் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இறுதி போட்டியானது சிட்னியிலிருந்து மாற்றப்பட்டு, பெர்த் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆஷஸ் டெஸ்ட் அட்டவணை 

  • முதல் டெஸ்ட் - டிசம்பர் 8 -12 - கபா மைதானம், பிரிஸ்பேன்
  • இரண்டாவது டெஸ்ட் - டிசம்பர் 16-20 - ஓவல், அடிலெய்டு (பகலிரவு டெஸ்ட்)
  • மூன்றாவது டெஸ்ட் - டிசம்பர் 26 - 30 - எம்.சி.ஜி, மெல்போர்ன் (பாக்ஸிங் டே டெஸ்ட்)
  • நான்காவது டெஸ்ட் - ஜனவரி 5 - 9 - எஸ்.சி.ஜி, சிட்னி (பிங்க் டெஸ்ட்)
  • ஐந்தாவது டெஸ்ட் - ஜனவரி 14-18 - ஆப்டஸ் மைதானம், பெர்த். 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை