இங்கிலாந்தின் புகழ்பெற்ற பந்து வீச்சாளர் ஆஷ்லே கில்ஸ். இவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 54 டெஸ்ட், 62 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 145 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Advertisement
இந்நிலையில் இவர் தனது ஆல் டைம் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதேசமயம் இந்த அணியில் ஒரே ஒரு இங்கிலாந்து வீரர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரது காலத்தின் தலைசிறந்த பந்துவீச்சாளரான கிளென் மெக்ராத்தின் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷ்லே கில்ஸ் ஆல் டைம் லெவன்: ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விவிய ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, ஜாக் காலிஸ், இயன் போத்தம், ஆடம் கில்கிறிஸ்ட், வாசிம் அக்ரம், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், ஆலன் டொனால்ட்.