ஐசிசி தரவரிசை: அஷ்வின், விராட் கோலி முன்னேற்றம்!

Updated: Wed, Mar 15 2023 16:15 IST
Ashwin Regains Top Spot In ICC Test Rankings For Bowlers; Kohli, Axar Make Big Moves Among Batters
Image Source: Google

இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் கடந்த மார்ச் 13ஆம் தேதியுடன்  முடிவடைந்தது. அகமதாபாத் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது . இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது .

தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை தற்போது அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். குறிப்பாக விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தர வரிசையில் முன்னேறி இருக்கின்றனர் .

நீண்ட காலமாக ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் வைத்து வந்த இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் போட்டியில் ரன் குவிக்காததால் ஜூலை மாதம் முதல் டாப் 10 தரவரிசையில் இருந்து கீழ் இறங்கினார். விராட் கோலி அவுட் ஆப் ஃபார்மில் இருந்த காலகட்டங்களில் அவரது தரவரிசை பின்னோக்கி சென்று கொண்டே இருந்தது.

நடந்து முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 186 ரன்கள் விராட் கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியதோடு மட்டுமல்லாமல் ஐசிசி பேட்டிங் தரவரிசையிலும் முதல்முறையாக முன்னேறி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது 28 வது சதத்தை கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு அடித்திருக்கும் விராட் கோலி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 13ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீப காலங்களில் இது அவரது அதிகபட்ச ரேங்கிங் ஆகும். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பந்த் இந்த தர வரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்தாவது இடத்திலும் உள்ளார்.

பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக பந்துவீசி 26 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். தற்போதைய ஐசிசி பௌலர்களின் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்ஜனை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் முன்னேறி இருக்கிறார் அஸ்வின். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் தரத்தில் இருந்த அஸ்வின் நம்பர் ஒன் ரேங்கிங் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் பகிர்ந்து கொண்டார். தற்போது அகமதாபாத்தில் இவர் சிறப்பாக பந்து வீசி ஆரம்பிக்கீட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி ஐசிசி பவுலர்களின் தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் இந்தத் தொடரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தாலும் டேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் மூன்று அரை சதங்களை எடுத்து இந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியா அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றார். இவர் நான்கு போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 264 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிலும் நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் எடுத்த 84 ரன்கள் இவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் ஆகும். டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் எடுத்த 74 ரன்கள் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சிறப்பான பேட்டிங்கின் மூலம் ஐசிசி தரவரிசையில் எட்டு இடங்கள் முன்னேறி தற்போது 44ஆவது இடத்தில் இருக்கிறார் அக்சர் பட்டேல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை