ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisement

அதன்படி இன்று நடைபெற்றுவரும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 6 ரன்களுடனும், இந்த தொடரில் ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர். 

இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 72 ரன்களில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாட முயற்சித்து 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த தீபக் ஹூடா, ஷனகாவின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement

அதன்பின் அதிரடியாக விளையாடிவந்த ரிஷப் பந்தும் 17 ரன்கள் எடுத்த நிலையில் தில்ஷன் மதுஷாங்கா ஓவரில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இறுதில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிக்கர் விளாசி இன்னிங்ஸை முடித்து வத்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷாங்கா 3 விக்கெட்டுகளையும், கேப்டன் தசுன் ஷானகா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News