ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான், இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முன்னேறிய நிலையில், மீதமுள்ள இடத்தை பிடிக்கு அணி எது? என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

Advertisement

அதன்பின் நேற்று நடைபெற்ற முக்கியமான் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - அப்துல்ல ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸ்மான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 ரன்கள் எடுத்த நிலையில் துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் அரைசதம் கடந்த அப்துலா ஷஃபிக் 52 ரன்களுக்கும், முகமது ஹாரிஸ் 3 ரன்களுக்கும், முகம்மது நவாஸ் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த முகமது ரிஸ்வான் - இஃப்திகார் அஹ்மத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 12ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுப்பககம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஃப்திகார் அஹ்மத் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷதாப் கானும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த முகமது ரிஸ்வான் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 86 ரன்களை குவித்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 42 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளையும், பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

இதையடுத்து 253 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அதிரடியாக தொடங்கியது. 3.2ஒவரில் ஷதாப் கானின் அற்புதமான ஃபீல்டிங்லின் மூலம் குசால் பெரேரா 17 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகினார். அதன்பின் ஆட்டத்தின் 13.2 வது ஓவரை வீசிய ஷதாப் கான் ஓவரில் பதும் நிஷங்கா அவரிடமே கேட்ச் கொடுத்து 29 ரன்களில் ஆட்டமிழந்தார் நிசாங்கா. 

அதன்பின் இணைந்த குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமாக விளையாடினார்கள். இதில் சதீரா சமரவிக்ரமா 48 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 91 ரன்கள் எடித்திருந்த குசால் மெண்டிஸும் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷானாகா, துனித் வெல்லாலாக, மதுஷன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதிலும் 41ஆவது ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டத்தை திருப்பினார். இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவையான போது அசலங்கா இறுதிப் பந்தில் வெற்றிக்கான 2 ரன்களை எடுத்து அசத்தினார். அசலங்கா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். 

Advertisement

எளிமையாக வெற்றியடைய வேண்டிய இலங்கை தட்டு தடுமாறி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் கடைசிவரை போராடி தோற்றது. இஃப்திகார் அஹமது  3 விக்கெட்டுகளும் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன், 12ஆவது முறையாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News