இலங்கையில் நடைபெற்று வந்த மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியானது இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.  இந்நிலையில் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

Advertisement

அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து மூன்று இடங்கள் முன்னேறி 06ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இந்திய வீராங்களை ஷஃபாலி வர்மா 11ஆம் இடத்தில் நீடித்து வரும் நிலையில், இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுர் 5 இடங்கள் பின் தங்கி 16ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

Advertisement

மேற்கொண்டு இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் முன்னேறி 18ஆம் இடத்திற்கும், இலங்கை வீராங்கனை ஹர்ஷிதா சமரவிக்ரமா மூன்று இடங்கள் முன்னேறி 20ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.  இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனீ மற்றும் தஹ்லியா மெக்ராத் இருவரும் முதலிரண்டு இடங்களை தக்கவைத்துள்ளனர். மேலும் மூன்றாம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் நீடித்து வருகிறார்.

அதேசமயம் மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீராங்கனைகள் சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளென் ஆகியோர் முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன. மூன்றாம் இடத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா நீடிக்கிறார். இப்பட்டியலின் நான்காம் இடத்திற்கு பாகிஸ்தானின் சதியா இக்பால் முன்னேறி அசத்தியுள்ளார். அதேசமயம் இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 4 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

அதேபோல் இந்திய வீராங்கனை ராதா யாதவ் 7 இடங்கள் முன்னேறி 13ஆம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் இரண்டாம் இடத்திலும், இந்திய அணியின் தீப்தி சர்மா மூன்றாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். மேற்கொண்டு நான்காம் இடத்தில் நியூசிலாந்தின் அமிலியா கெரும், 5ஆம் இடத்தில் சமாரி அத்தபத்துவும் நீடித்து வருவவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News