ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia Women vs England Women 2nd ODI Dream11 Prediction: இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 14) மெல்போர்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. மறுபக்கம் இங்கிலாந்து மகளிர் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனையில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
AU-W vs EN-W 2nd ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
- இடம் - ஜங்ஷன் ஓவல் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்
- நேரம் - ஜனவரி 14, அதிகாலை 4.35 மணி
AU-W vs EN-W 2nd ODI: Pitch Report
இப்போட்டி மெல்போர்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்வுள்ளது. இங்கு இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், நாளை முதல் முறையாக சர்வதேச ஒருநாள் போட்டி நடத்தப்படவுள்ளது. இதனால் இந்த மைதானத்தின் புள்ளிவிவரங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிக பட்ச ரன்களாக 335 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளதால், இங்கு பேட்டர்களுக்கு சற்று ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AU-W vs EN-W 2nd ODI: Where to Watch?
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் ஸ்டாஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு மகிழ முடியும். இது தவிர, இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளையும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் நேரலையில் காணலாம்.
AU-W vs EN-W 2nd ODI: Head To Head Record
- மோதிய போட்டிகாள் - 87
- ஆஸ்திரேலிய மகளிர் அணி - 59
- இங்கிலாந்து மகளிர் அணி - 24
- முடிவில்லை - 04
AU-W vs EN-W 2nd ODI: Dream11 Team
- விக்கெட் கீப்பர் - பெத் மூனி, அலிசா ஹீலி
- பேட்டர்கள் - எல்லிஸ் பெர்ரி, டாமி பியூமண்ட், ஹீதர் நைட்
- ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸ்கைவர் பிரண்ட் (கேப்டன்), அன்னாபெல் சதர்லேண்ட் (துணை கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர், ஆலிஸ் கேப்ஸி
- பந்து வீச்சாளர்கள் - மேகன் ஷாட், சோஃபி எக்லெஸ்டோன்
Australia Women vs England Women 2nd ODI Probable Playing XI
Australia 2nd ODI Probable Playing XI: அலிசா ஹீலி (கேப்டன்), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், அலானா கிங், கிம் கார்த், மேகன் ஷாட், டார்சி பிரவுன்
England 2nd ODI Probable Playing XI: டாமி பியூமண்ட், மையா பௌச்சர், ஹீதர் நைட் (கேப்டன்), நாட் ஸ்கைவர்-பிரண்ட், டேனியல் வைட்-ஹாட்ஜ், ஏமி ஜோன்ஸ், ஆலிஸ் கேப்ஸி, சார்லோட் டீன், சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபில்லர், லாரன் பெல்
AU-W vs EN-W 2nd ODI Dream11 Prediction, AU-W vs EN-W Dream11 Prediction, Today Match AU-W vs EN-W, AU-W vs EN-W ODI Series, AU-W vs EN-W Dream11 Team, Fantasy Cricket Tips, AU-W vs EN-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia Women vs England Women
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.