பாகிஸ்தான் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர்.  இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 12 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 24 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.

Advertisement

இதில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த பாபர் ஆசாம் 37 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் காம்ரன் குலாம் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த துணைக்கேப்டன் சல்மான் அலி ஆகவும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் முகமது ரிஸ்வானும் 44 ரன்னில் விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணி 117 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் களமிறங்கிய இர்ஃபான் கான் மாற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்த்தொடங்கியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய் ஷாஹீன் அஃப்ரிடி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, மறுப்பக்கம் நிதானமாக விளையாடி வந்த இர்ஃபான் கானும் 22 ரன்களில் சிங்கிள் எடுக்க முயற்சித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய நசீம் ஷா ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய ஹாரிஸ் ராவுஃப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் மறுபக்கம் பவுண்டரியும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட நசீம் ஷா ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோர் தாலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News