AUS vs PAK, 1st T20I: பாகிஸ்தானை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

Updated: Thu, Nov 14 2024 17:30 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.  

இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது இன்று தொடங்கியது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ஓவர்களை கொண்ட போட்டியாக இது தொடங்கியது. அந்தவகையில் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸரையும் பதிவுசெய்து அதிரடியாக தொடங்கினர். இதில் 9 ரன்களை எடுத்த கையோடு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் தனது விக்கெடை இழந்தர். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித்தளினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 7 ரன்களை எடுத்திருந்த மேத்யூ ஷார்ட் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதேசமயம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து டிம் டேவிட்டும் 10 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தனது பங்கிற்கு 21 ரன்களைச் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 7 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா, ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய ஃபர்ஹான் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் முகமது ரிஸ்வானும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து அணியின் நட்சத்திர வீரர்களான உஸ்மான் கான் 4 ரன்களிலும், பாபர் ஆசாம் 3 ரன்களிலும், இர்ஃபான் கான் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் பாகிஸ்தான் அணி 16 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஹசீபுல்லா கான் மற்றும் அப்பாஸ் அஃப்ரிடி ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஹசீபுல்லா கான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 12 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ஷாஹீன் அஃப்ரிடியும் 11 ரன்களிலும், அடுத்து வந்த நசீம் ஷா ரன்கள் ஏதுமின்றியும் என ஆடம் ஸாம்பாவின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்பாஸ் அஃப்ரிடி 20 ரன்களைச் சேர்த்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 7 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நாதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை