AUS vs PAK, 1st test: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

Updated: Wed, Dec 13 2023 14:01 IST
AUS vs PAK, 1st test: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு! (Image Source: Google)

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் பாபர் ஆசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் காண உள்ளது. பாபர் ஆசம் ஒரு வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. அந்த அணியில் அமீர் ஜமால் மற்றும் குர்ரம் ஷாஜாத் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: இமாம் உல் ஹக், அப்துல்லா ஷாபீக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் ஆசம், சவூத் சகீல், சர்ப்ராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆஹா, பஹீம் அஷ்ரப், ஷாகின் அப்ரிடி, அமீர் ஜமால், குர்ரம் ஷாஜாத்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை