இந்திய ஏ அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதால் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது இன்று மெல்போர்னில் இன்று தொடங்கியது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற் ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், அபிமன்யூ ஈஸ்வரன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், சாய் சுதர்ஷன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ஏ அணி 11 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

அதன்பின் இணைந்த தேவ்தத் படிக்கல் - துருவ் ஜூரெல் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்தனர். இதுல் தேவ்தத் படிக்கல் 26 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய நிதீஷ் ரெட்டி 16 ரன்னிலும், அடுத்து வந்த தனுஷ் கோட்டியான் ரன்கள் ஏதுமின்றியும், கலீல் அஹ்மத் ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரெல் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161  ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளையும், பியூ வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணிக்கு கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி மற்றும் மார்கஸ் ஹாரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக்ஸ்வீனி 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் பான்கிராஃப்ட் 3 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். இந்தனால் ஆஸ்திரேலிய ஏ அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் மார்கஸ் ஹாரிஸ் 26 ரன்களுடனும், சாம் கொண்டாஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய ஏ அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதானையடுத்து 108 ரன்கள் பின் தங்க்கிய நிலையில் ஆஸ்திரேலிய ஏ அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News