ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரண்டவது டி20 போட்டியானது நேற்று எடின்பர்க்கில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் அதிரடி வீரர்கள் டிராவிஸ் ஹெட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாலும், ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டொய்ன்ஸ், டிம் டேவிட் ஆகியோரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். 

Advertisement

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சதமடித்து அசத்திய ஜோஷ் இங்கிலிஸ் 103 ரன்களைச் சேர்த்தார். ஸ்காட்லாந்து தரப்பில் பிராட்லி கர்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி ஸ்காட்லாந்து அணியில் பிராண்டன் மெக்முல்லன் அரைசதம் கடந்து 59 ரன்களைச் சேர்த்தார்.

அதேசமயம் ஜார்ஜ் முன்ஸி 19 ரன்களை எடுத்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 16.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய தரப்பில் மார்கஸ் ஸ்டோய்ன்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஜோஷ் இங்கிலிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ் இங்கிலிஸ் 43 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்திருந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஆரோன் ஃபிஞ்சை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு ஆரோன் ஃபிஞ்ச் 47 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஆஸ்திரேலியாவிற்காக அதிவேக சதமடித்த வீரர்கள் (சர்வதேச டி20)

  • 43 பந்துகள்: ஜோஷ் இங்கிலிஸ் (2024)
  • 47 பந்துகள்: ஆரோன் பின்ச் (2013)
  • 47 பந்துகள்: ஜோஷ் இங்கிலிஸ் (2023)
  • 47 பந்துகள்: கிளென் மேக்ஸ்வெல் (2023)
  • 49 பந்துகள்: கிளென் மேக்ஸ்வெல் (2016)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News