ஆஸ்திரேலியர்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!

Updated: Sat, Feb 04 2023 11:48 IST
Aussies Playing Usual Mind Games, Ashwin Dismisses Smith's Comment On Relevance Of Tour Games (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் காவஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 9ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணி அடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த இரு அணிகளும் இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருக்கின்றன. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி குறைந்தது மூன்று போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தங்களுக்கு இந்தியாவில் பயிற்சி ஆட்டங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டது. மேலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை ஆஸ்திரேலியாவில் அமைத்து, இந்திய தொடருக்கு வரவிருக்கும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை அந்த மைதானத்தில் போட்டி தந்து விளையாட வைத்திருக்கிறது. மேலும் இங்கு வரும் ஆஸ்திரேலியா அணிக்கு பெங்களூரில் உள்ள ஆலூர் மைதானத்தில் பயிற்சிகளை ஏற்பாடும் செய்திருக்கிறது.

ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் இந்தியாவில் பயிற்சி ஆட்டத்தில் தரப்படுகின்ற ஆடுகளம் போட்டிக்கான ஆடுகளத்திற்கு நேரெதிராகத்தான் இருக்கும். எனவே இந்தியாவில் பயிற்சி போட்டிகளை விளையாடுவது வீணான வேலை என்று கூறி இருந்தார். இன்னும் ஒரு படி மேலே போய் ஆஸ்திரேலியா லெஜன்ட் விக்கெட் கீப்பர் ஹீலி இந்தியா எப்பொழுதும் இப்படித்தான் ஏமாற்றும் என்கின்ற வகையில் பேசி இருந்தார்.

தற்பொழுது இவர்களுக்கு பதிலடித்தரும் விதமாக இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின்  “ஒரு டூருக்கு வருவதற்கு முன்பு ஆஸ்திரேலியா இப்படியான வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடும். ஸ்லெட்ஜிங் செய்யும். இப்படி ஏதாவது பில்டப் செய்து கொண்டே இருப்பது அவர்களுடைய இயல்பு. இப்படி எல்லாம் ஏதாவது செய்வதால் போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடுகிறது. இது பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் சொல்லும்படி இந்தியா அவர்களிடம் நடந்து கொள்வதில்லை.

இதில் பல விஷயங்கள் இருக்கிறது. இந்தியாவும் சில நேரங்களில் வெளியில் போகும் பொழுது பயிற்சி போட்டிகளில் விளையாடாது. நாங்கள் பயிற்சி போட்டியில் விளையாடும் பொழுது எங்களை வைத்து டிக்கெட்டுகளை விற்று சம்பாதிக்கிறார்கள். அப்படி சம்பாதிப்பதால் 11 பேர் மட்டுமே விளையாட வேண்டியதாக இருக்கும். எனவே நாங்களும் இப்படி சில காரணங்களால் பயிற்சி போட்டிகளை மறுத்தது உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை