WI vs AUS, 1st T20I: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுக வீரர் மிட்செல் ஓவன் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் அரைசதம் கடந்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்.

Advertisement

ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிக்களுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்ரு ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 18 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

இதில் இருவரும் அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், இரண்டாவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்து ரோஸ்டன் செஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 55 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் ஷும்ரான் ஹெட்மையர் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து, மற்ற நட்சத்திர வீரர்கள் ரோவ்மன் பவெல், ஆண்ட்ரெ ரஸல், ஷெர்ஃபேன் ரூதார்ஃபோர்ட், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஸூயிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடியா ஆஸ்திரேலிய அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 2 ரன்னிலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 3 சிக்ஸர்களுடன் 24 ரன்னிலும், ஜோஷ் இங்லிஸ் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 18 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் 11 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர்.

Also Read: LIVE Cricket Score

பின்னர் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் மற்றும் மிட்செல் ஓவன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 51 ரன்களில் கேமருன் க்ரீனும், 6 சிக்ஸர்களுடன் 50 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News