WI vs AUS, 4th T20I: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான நான்காவது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் அரைசாதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

Advertisement

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று (ஜூலை 27) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய பிராண்டன் கிங் 18 ரன்களுக்கும், கேப்டன் ஷாய் ஹோப் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸூம் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் - ரோவ்மன் பாவெல் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரூதர்ஃபோர்ட் 31 ரன்களுக்கும், ரொவ்மன் பாவெல் 28 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 28 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 26 ரன்களையும் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட் மற்றும் சீன் அபோட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் - ஜோஷ் இங்கிலிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஷ் இங்கிலிஸ் அரைசதம் கடந்ததுடன் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 47 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த கேமரூன் க்ரீன் ஒருமுனையில் சிறப்பாக விளையாட மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Also Read: LIVE Cricket Score

அதேசமயம் அரைசதத்தைப் பதிவுசெய்த கேமரூன் க்ரீன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 55 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News