மகளிர் ஆஷஸ் 2025: ஆஸ்திரேலிய மகளிர் டெஸ்ட் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நடப்பு மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன் மகளிர் ஆஷாஸ் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜனவரி 30ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய மகளிர் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது.
அதன்படி அலிசா ஹீலி தலைமையிலான இந்த அணியில் தஹ்லியா மெக்ராத் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர்த்து அறிமுக வீராங்கனை ஜார்ஜியா வோலிற்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் அவர் அறிமுகமாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி, மேகன் ஸ்காட் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய மகளிர் டெஸ்ட் அணி: அலிசா ஹீலி (கேப்டன்), தஹ்லியா மெக்ராத், டார்சி பிரவுன், ஆஷ்லீ கார்ட்னர், கிம் கார்த், அலானா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், ஜார்ஜியா வேர்ஹாம்
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஹீதர் நைட் (கே), டாமி பியூமண்ட், லாரன் பெல், மையா பௌச்சர், கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், பெஸ் ஹீத், ஆமி ஜோன்ஸ், ரியானா மெக்டொனால்ட்-கே, நாட் ஸ்கைவர்-பிரண்ட், டேனியல் வையட்-ஹாட்ஜ்