ஐசிசி வெளியிட்டுள்ள வருடாந்திர டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Advertisement
2ஆவது இடத்தில் உள்ள இந்தியாவை விடவும் ஆஸ்திரேலிய அணி 9 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முதலிடத்தில் உள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் பாகிஸ்தானை 1-0 என வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது.
Advertisement
இதனால் டெஸ்ட் தரவரிசையிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.
தரவரிசையில் 3ஆவது இடத்தில் நியூசிலாந்தும் 4ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும் 5ஆவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.
இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் கடைசி 5 இடங்களில் உள்ளன. மே 2019 முதல் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களின் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.