Australia vs Bangladesh Dream11 Prediction, T20 World Cup 2024: 9ஆவது சீசன் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த 8 அணிகளில் இருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் போட்டி குரூப் 1-இல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 

Advertisement

AUS vs BAN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs வங்கதேசம்
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆண்டிகுவா
  • நேரம் - ஜூன் 21, காலை 6 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

AUS vs BAN Pitch Report

ஆண்டிகுவாவில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானமானது வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மித வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 125 ரன்களாக இருந்தாலும், இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிகளவு வெற்றியை ஈட்டியுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

AUS vs BAN: T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 10
  • ஆஸ்திரேலியா - 06
  • வங்கதேசம் - 04

AUS vs BAN: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Australia vs Bangladesh Probable Playing XI

ஆஸ்திரேலிய உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் (கே), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், ஆடம் ஸாம்பா.

Advertisement

வங்கதேசம் உத்தேச லெவன்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜாகர் அலி, தன்சீம் ஹசன் ஷாகிப், ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

AUS vs BAN T20 World Cup Dream11 Team

விக்கெட் கீப்பர் - லிட்டன் தாஸ்
பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட், மஹ்முதுல்லா ரியாத், டிம் டேவிட்
ஆல்-ரவுண்டர்கள் - ஷகிப் அல் ஹசன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் (கேப்டன்)
பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஆடம் ஸாம்பா (துணை கேப்டன்), தன்சீம் ஹசன் ஷகிப்.

Advertisement

AUS vs BAN Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match AUS vs BAN, AUS vs BAN Dream11 Team, Fantasy  Cricket Tips, AUS vs BAN Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs Bangladesh

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News