Australia vs England Dream11 Prediction Match 17, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலபப்ரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து அணியானது முதல் போட்டியில் மழை காரணமாக வெற்றிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியானது மிகப்பெரும் ரைவல்ரியாக கருதப்படும் நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆதிக்கத்தை செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

AUS vs ENG: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
  • இடம் - கென்ஸிங்டன் ஓவல், பார்படாஸ்
  • நேரம் - ஜூன் 08ஆம் தேதி, இரவு 10.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

AUS vs ENG Pitch Report

பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 46 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 29 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 14 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 138 ரன்களாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம். 

AUS vs ENG T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 23
  • ஆஸ்திரேலியா - 10
  • இங்கிலாந்து - 11
  • முடிவில்லை - 03

AUS vs ENG: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Australia vs England Probable Playing XI

ஆஸ்திரேலிய உத்தேச லெவன்: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹசில்வுட்.

Advertisement

இங்கிலாந்து உத்தேச லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), வில் ஜாக், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், மார்க் வுட்.

AUS vs ENG T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர் (துணை கேப்டன்), பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், வில் ஜாக்ஸ், டிம் டேவிட்
  • ஆல்ரவுண்டர் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் (கேப்டன்), மொயின் அலி
  • பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட்.

AUS vs ENG Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match AUS vs ENG, AUS vs ENG Dream11 Team, Fantasy Cricket Tips, AUS vs ENG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs England

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News