இந்திய மகளிர் மற்றும் இந்த ஏ அணிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதில் இந்திய ஏ அணி இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதேசமயம் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களுக்கான ஆட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய ஏ மற்றும் தென் ஆப்பிரிக்க ஏ அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
இதில் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கு இடையே இரண்டு நான்குநாள் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஆக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு நான்கு நாள் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
அதன்படி இந்தியா ஏ மற்றும் தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம் ஆஸ்திரேலிய மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேலும் இந்திய மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இரு அணிகளும் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் ஒருநாள் தொடர் அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி - செப்டம்பர் 14 - சென்னை
- இரண்டாவது ஒருநாள் போட்டி - செப்டம்பர் 16 - சென்னை
- மூன்றாவது ஒருநாள் போட்டி - செப்டம்பர் 19 - சென்னை
இந்தியா ஏ - ஆஸ்திரேலிய ஏ அட்டவணை
- முதல் போட்டி - செப்டம்பர் 16 - 19 - லக்னோ
- இரண்டாவது போட்டி - செப்டம்பர் 23-26 - லக்னோ
- முதல் ஒருநாள் - செப்டம்பர் 30 - கான்பூர்
- இரண்டாவது ஒருநாள் - அக்டோபர் 03 - கான்பூர்
- மூன்றாவது ஒருநாள் - அக்டோபர் 05 - கான்பூர்
Also Read: LIVE Cricket Score
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்க ஏ ஆட்டவணை
- முதல் போட்டி - அக்டோபர் 30 - நவம்பர் 02 - பெங்களூரு
- இரண்டாவது போட்டி - நவம்பர் 06 - 09 - பெங்களூரு
- முதல் ஒருநாள் - நவம்பர் 13 - பெங்களூரு
- இரண்டாவது ஒருநாள் - நவம்பர் 16 - பெங்களூரு
- மூன்றாவது ஒருநாள் - நவம்பர் 19 - பெங்களூரு