AUS-W vs BAN-W, Match 17, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும்17ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, நஹிதா அக்தர் தலைமையிலான வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே தழுவாமல் வெற்றியைக் குவித்து வருகிறது. இதனால் இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

AUS-W vs BAN-W: Match Details

மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா மகளிர் vs வங்கதேசம் மகளிர்
இடம் - ஏசிஏ கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம்
நேரம்- அக்டோபர் 16, மதியம் 3.0 மணி (இந்திய நேரப்படி)

AUS-W vs BAN-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

AUS-W vs BAN-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 04
  • Australia Women: 04
  • Bangladesh Women: 00
  • No Result: 02

AUS-W vs BAN-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 18 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 13 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 233 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 387 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

AUS-W vs BAN-W: Possible XIs

Advertisement

Australia Women: பெத் மூனி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், அலிஸா ஹீலி(கேப்டன்), எலிஸ் பெர்ரி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், கிம் கார்த், அலானா கிங், மேகன் ஸ்கட்

Bangladesh Women: ரூபியா ஹைதர், நிகர் சுல்தானா (கேப்டன்), ஷர்மின் அக்தர், சோபனா மோஸ்டரி, சுமையா அக்டர், ஃபஹிமா காதுன், ஷோர்னா அக்டர், நஹிதா அக்டர், மருஃபா அக்டர், நிஷிதா அக்டர் நிஷி, ரபேயா கான்

AUS-W vs BAN-W: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்து வருவதால், இந்த ஆட்டத்திலும் அதனை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Probable Best Bowler

பந்துவீச்சில் அனபெல் சதர்லேண்ட் சிறப்பான ஃபார்மில் உள்ளார். வங்கதேசம் தரப்பில் ஃபஹிமா கதும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Today Match Prediction: வங்கதேசத்தை காட்டிலும் ஆஸ்திரேலியா வலிமையான அணி என்பதால், இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. 

Also Read: LIVE Cricket Score

AUS-W vs BAN-W Prediction Match 17, ICC Womens World Cup 2025, Today Match AUS-W vs BAN-W, AUS-W vs BAN-W Prediction, AUS-W vs BAN-W Predicted XIs, Injury Update of the match between Australia Women vs Bangladesh Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News