ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஆஸ்திரேலியாவின் ஹாட்ரிக் நாயகன்!

Updated: Fri, Aug 20 2021 16:57 IST
Australia's Hattrick Hero Nathan Ellis Lands IPL Deal (Image Source: Google)

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும் இத்தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. அதன் ஒருபதியாக  ஐபிஎல் அணிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக டி20 போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நாதன் எல்லீஸ், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் ரிசர்வ் வீரராக விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி இத்தொடரில் பங்கேற்காத வெளிநாட்டு வீரருக்கு மாற்று வீரராக நாதன் எல்லீஸ் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் இவர் எந்த அணிக்காக விளையாடுவார் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

இருப்பினும், ஐபிஎல் தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ் மற்றும் வங்கதேச அணி வீரர்கள் விளையாடப் போவதில்லை என்பதால், அவர்களில் யாரேனும் ஒருவருக்கு மாற்றாக நாதன் எல்லீஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை