பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்த சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படமல் இருந்த நிலையில், அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயத்தை சந்தித்துள்ளதன் காரணமாக, பியூ வெப்ஸ்டருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹேசில்வுட் இரண்டாம் நிலை காயத்தை சந்தித்துள்ளதால் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியுடன் பயணிப்பார் என்பதையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது. 

இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் ஸ்காட் போலண்ட் சேர்க்கப்படுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கூடுதல் வீரர்கள் பட்டியலில் அறிமுக வீரர்கள் சீன் அபோட் மற்றும் பிராண்டன் டக்கெட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜோஷ் ஹேசில்வுட்டின் விலகல் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர். 

Advertisement

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News