பந்து தாக்கி காயமடைந்த அசாம் கான்; அதே பந்தில் விக்கெட்டை இழந்த சோகம் - காணொளி!

Updated: Sat, Aug 31 2024 14:23 IST
Image Source: Google

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணியில் ஃபகர் ஸமான், கோஃபி ஜேம்ஸ் மற்றும் இமாத் வசிம் ஆகியோரைத் தவிர்த்து மற்ற விரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் அந்த அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 40 ரன்களையும், இமாத் வசிம் 40 ரன்களையும், கோஃபி ஜேம்ஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். கயனா அணி தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கயானா அமேசன் வாரியர்ஸ் அணியும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அந்த அணியில் ஷாய் ஹோப் 41 ரன்களையும், ரொமாரியோ செஃபெர்ட் 32 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆல் ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் கடைசி ஓவரை எதிர்கொண்டார்.  முகமது அமீர் வீசிய கடைசி ஓவரில் டுவைன் பிரிட்டோரியர்ஸ் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளையும், கடைசி பந்தில் சிக்ஸரையும் விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியின் போது கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய அசாம் கான் பந்து தாக்கி காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Also Read: Funding To Save Test Cricket

அதன்படி, இன்னிங்ஸைன் 11ஆவது ஓவரை வீசிய ஷமார் ஸ்பிரிங்கர் அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஸ்லோவர் பவுன்சராக வீசினார். அப்போது அந்த பந்தை எதிர்கொண்ட அசாம் கான், பந்து சரியாக கணிக்காமல் தவறவிட, அது நேரடியாக அவரது தொண்டையை தாக்கியது. இதனால் அசாம் கான் நிலை தடுமாறி கீழே விழுந்ததுடன், அவரை தாக்கிய பந்து ஸ்டம்புகளையும் பதம் பார்த்தது. இதனால் கயமடைந்த கையோடு அசாம் கான் தனது விக்கெட்டையும் இழந்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை