விராட் கோலி, ஹாசிம் அம்லா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!

Updated: Fri, Feb 07 2025 13:08 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட முடிவுசெய்துள்ளது. இந்த தொடருக்கான தயாரிப்பைப் பொறுத்தவரை, இந்த முத்தரப்புத் தொடர் மூன்று அணிகளுக்கும் முக்கியமானது. அந்தவகையில் இந்த முத்தரப்பு தொடருக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதன்படி இத்தொடரில் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 4 போட்டிகள் நடைபெறவுள்ளது.  இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள்

இந்தப் போட்டியில் பாபர் 43 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்கள் எடுத்தவர் என்ற உலக சாதனையைப் படைப்பார். அவர் 123 ஒருநாள் போட்டிகளில் 120 இன்னிங்ஸ்களில் விளையாடி 56.73 என்ற சராசரியில் 5957 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது, ​​ஒருநாள் போட்டிகளில் வேகமாக 6000 ரன்களை எடுத்த சாதனை ஹாஷிம் அம்லாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் 123 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்காக அதிக சதங்கள்

இது தவிர, இத்தொடரில் பாபர் ஆசாம் ஒரு சதம் அடித்தால், பாகிஸ்தானுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனைப் படைப்பார். தற்போதுவரை அந்த அணியின் முன்னாள் வீரர் சயீத் அன்வர் 244 இன்னிங்ஸ்களீல் 20 ஒருநாள் சதங்களை அடித்ததே இதுநாள் வரை சாதனையாக உள்ளார். அதேசமயம் பாபர் ஆசாம் 120 இன்னிங்ஸில் 19 சதங்களை அடித்து அந்த ப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

விராட் கோலியை வீழ்த்த வாய்ப்பு

மேற்கொண்டு அவர் சதமடிப்பதில் வெற்றி கண்டால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகாமாக 20 சதங்களை அடித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனை முறியடிக்கவுள்ளார். முன்னதாக விராட் கோலி 133 இன்னிங்ஸ்களில் 20 சதங்களை பூர்த்தி செய்ததே சாதனையாக இருக்கும் நிலையில், அதனை முறியடிக்கும் வாய்ப்பை பாப்ர் ஆசாம் பெற்றுள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் ஆசாம், ஃபகார் ஸமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தையாப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை