ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் பாகிஸ்தான் ஐசிசி தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் சிறிது புள்ளிகள் முன்னேறி 118 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 

Advertisement

இந்த நிலையில், கடின உழைப்பால் பாகிஸ்தான் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்ததற்கு அணி வீரர்கள் அனைவரின் கடின உழைப்பே காரணம்.

Advertisement

நீங்கள் எப்போது ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்தாலும் அது கண்டிப்பாக உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறது. முதல் இடம் பிடித்ததற்கு ஒட்டுமொத்த அணியின் உழைப்புமே காரணம். நாங்கள் முதல் இடத்தில் ஏற்கனவே இருந்தோம். துரதிருஷ்டவசமாக ஒரு தோல்வியினால் அந்த இடத்தை இழந்தோம். 

 

கடவுளின் கருணையால் நாங்கள் மீண்டும் இந்த இடத்துக்கு வந்துள்ளோம். வீரர்களின் கடின உழைப்பும், அவர்களது சிறப்பான செயல்பாடுமே இந்த இடத்தில் நாங்கள் இருப்பதற்கு காரணம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரை முழுவதுமாக வென்றது ஆசியக் கோப்பை தொடருக்கு எங்களுக்கு உந்துசக்தியாக அமையும். இந்த தொடர் எங்களுக்கு எளிதானதாக இருக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது சவாலாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News