ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முகமது நைம் - மெஹதி ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 28 ரன்களை எடுத்திருந்த நைம் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தாஹித் ஹிரிடோயும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மெஹிதி ஹசனுடன் நஜ்முல் ஹொசைன் ஜோடி சேர்ந்தார். 

Advertisement

இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சையும் நாலாபுறமும் சிதறடித்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இருவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 112 ரன்களை எடுத்திருந்த மெஹிதி ஹசன் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பா, மறுபக்கம் 9 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசியிருந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 112 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹிமும் 25 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களைக் குவித்தார்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களைக் குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான், குல்புதின் நைப் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News