Advertisement

 

Advertisement

Bangladesh vs Netherlands, Match 27 Dream11 PredictionICC T20 World Cup 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளன. இதனால் நாளைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறுகிறதே அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

BAN vs NED: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs நெதர்லாந்து
  • இடம் - அர்னோஸ் வேல் மைதானம், செயின்ட் வின்சென்ட்
  • நேரம் - ஜூன் 13, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

BAN vs NED Pitch Report

இந்த போட்டி கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வெல் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு இதுவரை மொத்தம் 5 டி20 சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 3 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது 118 ரன்களாவும், இங்கு அதிகபட்ச ஸ்கோர் 158 ரன்களாகவும் இருப்பதால், நிச்சயம் பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

BAN vs NED T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 04
  • வங்கதேசம் - 03
  • நெதர்லாந்து - 01
  • முடிவில்லை - 00

BAN vs NED: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Advertisement

Bangladesh vs Netherlands Probable Playing XI

வங்கதேசம் உத்தேச லெவன் : தன்ஸித் ஹசன், நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜாகர் அலி, ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் ஷகிப், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

நெதர்லாந்து உத்தேச லெவன்: மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓ'டவுட், விக்ரம்ஜீத் சிங், சிப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், டிம் பிரிங்கிள், பால் வான் மீகெரன், விவியன் கிங்மா.

Advertisement

BAN vs NED T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - லிட்டன் தாஸ்
  • பேட்ஸ்மேன் - தாவ்ஹித் ஹிரிடோய்
  • ஆல்-ரவுண்டர்கள் - பாஸ் டி லீட் (துணை கேப்டன்), லோகன் வான் பீக் (கேப்டன்), சிப்ரண்ட் இங்கல்பிரெக்ட், ரிஷாத் ஹுசைன்
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தாஃபிசூர் ரஹ்மான், பால் வான் மீகெரென், தஸ்கின் அகமது, விவியன் கிங்மா, தன்சீம் ஹசன் சாகிப்.’

BAN vs NED Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match BAN vs NED, BAN vs NED Dream11 Team, Fantasy  Cricket Tips, BAN vs NED Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh vs Netherlands

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News