வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடவில் இளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றுவருகிறது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் அதிரடி வீரர் முகமது நைம் 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அதன்பின் சைஃப் ஹொசைன், நஜ்முல் ஹொசைன் ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேற வங்கதேச அணியின் பேட்டிங் ஆர்டர் நிலைகுலைந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த அஃபிஃப் ஹொசைன் - நூருல் ஹசன் இணை சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மெல்ல மெல்ல உயர்த்தியது. 

பின் 36 ரன்களில் அஃபிஃப் ஹொசைன் ஆட்டமிழக்க, 28 ரன்னில் நூருல் ஹசனும் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய மெஹதி ஹசன் தனது பங்கிற்கு ஒருசில பவுண்டரிகளை விளாசினார். 

Also Read: T20 World Cup 2021

Advertisement

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News