வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

இந்நிலையில்  வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (அக்டோபர் 29) சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்கம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீசு அழைத்தார். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இரு அணி கேப்டன்களும் அறிவித்தனர். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து ஸோர்ஸியுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார்.

அதான்பின் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டோனி டி ஸோர்ஸி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தங்களது முதல் சர்வதேச டெஸ்ட் சதங்களைப் பதிவுசெய்தும் அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் ஸோர்ஸியுடன் இணைந்துள்ள டேவிட் பெட்டிங்ஹாமும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள டோனி டி ஸோர்ஸி 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 141 ரன்களுடனும், டேவிட் பெட்டிங்ஹாம் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வரும் டோனி டி ஸோர்ஸி தனது அரைசதத்தை நெருங்கியுள்ளார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதால்நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 109 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டோனி டி ஸோர்ஸி 49 ரன்களுடனும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News