Bangladesh vs South Africa 2nd Test Dream11 Prediction: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

இதனையடுத்து வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (அக்டோபர் 29) சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வெல்லும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

BAN vs SA 2nd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ஜாஹுர் அகமது சவுத்ரி மைதான, சட்டோகிராம்
  • நேரம் - அக்.29, காலை 9.30 மணி

BAN vs SA 2nd Test:Pitch Report

வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நாளை நடக்கிறது. இங்கு இதுவரை 24 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 10 முறை  முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 379 ரன்களாக உள்ளது, இது ஆட்டம் முன்னேறும் போது குறைந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்குள்ள ஆடுகளம் மிகவும் சமநிலையானது மற்றும் பேட்ஸ்மேன்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. இதனால் இப்போட்டியில் நிச்சயம் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

BAN vs SA 2nd Test: Where to Watch?

Advertisement

வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்து இத்தொடரை காணலாம்.

BAN vs SA 2nd Test: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 03
  • வங்கதேசம் - 00
  • தென் ஆப்பிரிக்கா - 03
  • முடிவில்லை - 00

Bangladesh vs South Africa 2nd Test Probable Playing XI

Advertisement

வங்கதேசம் உத்தேச லெவன்: ஷத்மன் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ், ஜகர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், நஹித் ராணா

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: டோனி டி சோர்ஜி, ஐடன் மார்க்ரம் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், ரியான் ரிக்கெல்டன், மேத்யூ பிரீட்ஸ்கி, கைல் வெர்ரைன், வியான் முல்டர், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, டேன் பீட்

BAN vs SA 2nd Test: Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - லிட்டன் தாஸ் (துணைக்கேப்டன்), கைல் வெர்ரைன்
  • பேட்ஸ்மேன்கள் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்ஃபிக்கூர் ரஹிம், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டோனி டி ஸோர்ஸி
  • ஆல்-ரவுண்டர் - ஐடன் மார்க்ரம் (கேப்டன்), மெஹிதி ஹசன்
  • பந்துவீச்சாளர்கள் - காகிசோ ரபாடா, நஹித் ராணா, வியான் முல்டர்
Advertisement

BAN vs SA 2nd Test Dream11 Prediction, BAN vs SA Dream11 Prediction, Today Match BAN vs SA, BAN vs SA Test Series, BAN vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, BAN vs SA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh vs South Africa

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News