Bangladesh vs Zimbabwe 2nd Test Dream11 Prediction: ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. 

Advertisement

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஏப்ரல் 28) சிட்டாகாங்கில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வங்கதேச அணி தோல்வியைத் தழுவினாலோ அல்லது போட்டியை டிரா செய்தாலோ தொடரை இழக்கும் என்பதால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் ஜிம்பாப்வே அணி இப்போட்டியை டிரா செய்தலே தொடரை வெல்லும் வாய்ப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பர்ப்பும் அதிகரித்துள்ளது. 

Advertisement

BAN vs ZIM 2nd Test: मैच से जुड़ी जानकारी

  • மோதும் அணிகள்- வங்கதேசம் vs ஜிம்பாப்வே
  • இடம் - ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானம், சிட்டாகாங்
  • நேரம் - ஏப்ரல் 28, காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)

BAN vs ZIM 2nd Test Pitch Report

வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்டாகாங்கில் நடைபெற்றவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 25 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 11 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 7 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் முதல் இன்னிங்ஸின் சராசரியானது 387 ரன்களாகவும், 4ஆவது இன்னிங்ஸ் சராசரி 226 ரன்களாகவும் உள்ளது. மேலும் இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 713 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

BAN vs ZIM Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 19
  • வங்கதேசம் - 08
  • ஜிம்பாப்வே - 08
  • டிரா - 03
Advertisement

BAN vs ZIM 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜாக்கர் அலி
  • பேட்ஸ்மேன்கள் - மொமினுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, பென் கரண், பிரையன் பென்னட் (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மதவெரே, மெஹ்தி ஹசன் மிராஸ் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - வெலிங்டன் மசகட்சா, ஹசன் மஹ்மூத், பிளெசிங் முசரபானி.

Bangladesh vs Zimbabwe 2nd Test Probable Playing XI

Bangladesh 2nd Test Probable Playing XI: மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மான் இஸ்லாம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மெஹ்தி ஹசன் மிராஸ், ஜாகர் அலி, தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், கலீத் அகமது, தன்சிம் ஹசன் சாகிப்.

Advertisement

Zimbabwe 2nd Test Probable Playing XI: பென் கரண், நிக் வெல்ச், கிரெய்க் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மதவெரே, நியாஷா மாயவ்வோ, வெலிங்டன் மஸகட்சா, ரிச்சர்ட் ந்ங்கராவா, ப்ளெஸிங் முசரபானி, விக்டர் நியாச்சேய்.

BAN vs ZIM 2nd Test Dream11 Prediction, BAN vs ZIM Dream11 Prediction, Today Match BAN vs ZIM, BAN vs ZIM Test Series, BAN vs ZIM Dream11 Team, Fantasy Cricket Tips, BAN vs ZIM Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh vs Zimbabwe

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News