மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1

Updated: Wed, Oct 02 2024 12:53 IST
Image Source: Cricketnmore

Bangladesh Women vs Scotland Women Dream11 Prediction, T20 World Cup 2024: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் வங்கதேச மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஸ்காட்லாந்து அணியானது முதல் முறையாக ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

BAN W vs SCO W World Cup Match: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேச மகளிர் vs ஸ்காட்லாந்து மகளிர்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - அக்.03 மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

BAN W vs SCO W T20I Pitch Report

நடப்பு டி20 உலகக்கோக்கை தொடரின் முதல் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 48 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 28 முறையும், சேஸிங் செய்த அணி 20 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்கலாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

BAN W vs SCO W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 04
  • வங்கதேச மகளிர் அணி - 04
  • ஸ்காட்லாந்து மகளிர் அணி - 00

BAN W vs SCO W World Cup Match: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Bangladesh Women vs Scotland Women Probable Playing XI

வங்கதேச மகளிர் உத்தேச லெவன்: நிகர் சுல்தானா (கே), திலாரா அக்தார், முர்ஷிதா காதுன், சோவன் மோஸ்டாரி, ரிது மோனி, தாஜ் நஹர், ஸ்வர்ணா ஆக்தார், ஃபஹிமா காதுன், நஹிதா அக்தர், சுல்தானா காதுன், சதி ராணி

ஸ்காட்லாந்து மகளிர் உத்தேச லெவன்: சாரா பிரைஸ், சாஸ்கியா ஹார்லி, ஐல்சா லிஸ்டர், மேகன் மெக்கால், டார்சி கார்ட்டர், கேத்ரின் பிரைஸ் (கே), ஒலிவியா பெல், கேத்ரின் ஃப்ரேசர், சோலி ஏபெல், ஹென்னா ரென்னி, ரேச்சல் ஸ்லேட்டர்.

BAN W vs SCO W Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - நிகர் சுல்தானா, சாரா பிரைஸ்
  • பேட்ஸ்மேன்கள் - முர்ஷிதா கதுன், சாஸ்கியா ஹார்லி
  • ஆல்-ரவுண்டர்கள் - ரிது மோனி, கேத்ரின் பிரைஸ் (கேப்டன்), ஷோர்னா அக்தர்
  • பந்துவீச்சாளர்கள் - நஹிதா அக்தர் (துணை கேப்டன்), ரேச்சல் ஸ்லேட்டர், ரபியா கான், ஒலிவியா பெல்.

BAN W vs SCO W T20I Dream11 Prediction, BAN W vs SCO W Dream11 Team, Fantasy  Cricket Tips, BAN W vs SCO W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh Women vs Scotland Women

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை