இலங்கை அணி தற்போது ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதனைத்தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.  அதன்பின் அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் மார்ச் 01ஆம் தேதியும், ஒருநாள்  தொடர் மார்ச் 13ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேச அணியில் புதிய கேப்டனாக நஜ்முல் ஹொசைன் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வருவதால், அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் நியமன் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

அதேசமயம் அணியின் மூத்த தொடக்க வீரரான தமிம் இக்பாலுக்கு இந்த அணியில் வாய்ப்பு மறுபக்கப்பட்டதுடன், வங்கதேச கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்திலிருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறுப்படுகிறது. அதேபோல் ஷொரிஃபுல் ஹசன், தன்ஸிம் ஹசன் ஷாகிப், சௌமியா சர்க்கார், முஸ்தபிசூர் ரஹ்மான், டஸ்கின் அஹ்மத் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடித்துள்ளனர். 

வங்கதேசம் - இலங்கை தொடர் அட்டவணை

  • முதலாவது டி20 போட்டி - மார்ச் 4 - சில்ஹெட்
  • 2ஆவது டி20 போட்டி- மார்ச் 6 - சில்ஹெட்
  • 3ஆவது டி20 போட்டி- மார்ச் 9 - சில்ஹெட்
  • முதலாவது ஒருநாள் போட்டி - மார்ச் 13 - சட்டோகிராம்
  • 2ஆவது ஒருநாள் போட்டி - மார்ச் 15 - சட்டோகிராம்
  • 3ஆவது ஒருநாள் போட்டி - மார்ச் 18 - சட்டோகிராம்

வங்கதேச டி20 அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), லிட்டன் தாஸ், அனாமுல் ஹக் பிஜோய், முகமது நைம் ஷேக், தாவ்ஹித் ஹ்ரிடோய், சௌமியா சர்க்கார், மஹேதி ஹசன், மஹ்முதுல்லா, தைஜுல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் ஷாகிப், அலிஸ் அல் இஸ்லாம்.

வங்கதேச ஒருநாள் அணி (முதல் இரண்டு போட்டிகள்): நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), அனமுல் ஹக் பிஜோய், சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ், முஷ்ஃபிக்கூர் ரஹீம், தாவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அஹ்மத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் ஷாகிப், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News