இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!

Updated: Mon, Mar 18 2024 21:49 IST
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு! (Image Source: Google)

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. 

இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்திருந்தன. இந்நிலையில்  இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இதையடுத்து வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான நஹித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாகிர் ஹசன், மஹ்முதுல் ஹசன், ஷத்மான் இஸ்லாம், லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷஹாதத் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், சையத் கலீத் அகமது, முஷ்பிக் ஹசன், நஹித் ராணா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை